கொழுப்பு கல்லீரல் பிரச்னைக்கு என்ன தீர்வு?
கொழுப்பு கல்லீரல் என்பது கல்லீரலில் 5 முதல் 10 சதவீதத்திற்கு மேல் கொழுப்பு அதிகமாக படிந்தால் வரும் நோயாகும்.
வழக்கமாக மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு அதிகமாக வரும். 20 ஆண்டுகளாக மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் இந்த நோய் வந்து அச்சுறுத்துகிறது.
உலகம் முழுவதும் இதன் பாதிப்பு அதிகமாய் கொண்டுள்ளது. ஆரம்ப நிலையில் இந்த நோய்க்கு எந்த அறிகுறியும் தெரியாது.
சில பேருக்கு வயிறு பொருமல், அஜீரணம், ஏப்பம், வலது பக்க மேல் வயிற்றில் வலி இருக்கக்கூடும்.
இந்த நோய் ஏற்பட அதிக உடல் பருமன், உணவில் அதிகமாக மாவு சத்துகள், இனிப்பு மற்றும் துரித உணவுகள், இனிப்பு பானங்கள் சேர்த்தல் ஆகியன முக்கிய காரணங்கள்.
மேலும், போதிய உடற்பயிற்சி இல்லாமை, அதிக மன அழுத்தம் போன்றவையும் இவை வர காரணங்களாகும்.
கல்லீரலில் அழற்சி, சிரோசிஸ் எனப்படும் கல்லீரல் பாதிப்புகள், மஞ்சள் காமாலை போன்றவற்றை அதிகரிக்க செய்யும்.
மேலும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உருவாக வாய்ப்பு அதிகம்.
மேற்கூறிய உணவு வகைகளை தவிர்த்தல், அன்றாட உடற்பயிற்சி, மதுப் பழக்கத்தை அறவே தவிர்த்தல் மூலம் இந்நோயை தடுக்க முடியும். பாதிப்புகளையும் குறைக்க முடியும்.