முகப்பருக்கள் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?
15 வயதுக்கு மேற்பட்டோருக்கு இயற்கையாகவே பருக்கள் வரும். இதனை நோயாக கருத வேண்டியதில்லை. அளவுக்கு அதிகமாக வரும் போது கவனம் செலுத்த வேண்டும்.
முகத்தில் அடையாளமாகவோ, தழும்பாகவோ மாறாத வகையில் இருந்தால் தோல் மருத்துவரின் ஆலோசனை பெற்று சிகிச்சை பெற வேண்டும்.
பருக்களை கிள்ளி விடவோ, அழகு சாதனங்கள் பயன்படுத்தவோ கூடாது. இதனை பயன்படுத்தினால் அதிகம் வர வாய்ப்பு உள்ளது.
மாதவிடாய், நீர்க்கட்டிகள் உள்ள பெண்களுக்கு பருக்கள் அதிகம் வர வாய்ப்பு உள்ளது.
பருக்கள் வருவதை தவிர்க்க ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறை குளிர்ந்த நீரில் முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும்.
வெயிலில் அதிகமாக சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.
தண்ணீர் அதிகமாக குடிக்கவும், பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும்.
ஐஸ்கிரீம், சாக்லேட், கொழுப்பு உள்ள உணவுப் பொருட்களை தவிர்ப்பது அவசியம்.