மழைக்காலத்தில் குழந்தைக்கு அடிக்கடி சளி பிடித்தால் என்ன செய்யலாம்?

சீதோஷ்ண நிலை மாற்றத்தால் குழந்தைகளுக்கு சளி பாதிப்பு ஏற்படுவது இயல்புதான் என்றாலும், இன்புளுயன்ஷா தடுப்பூசியை குழந்தைக்கு செலுத்த வேண்டும்.

இதனால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

பெற்றோர் கவனமாக ஆட்கள் அதிகம் உள்ள இடங்களுக்கு குழந்தையை துாக்கி செல்வதை தவிர்க்க வேண்டும்.

மழை காலங்களில் பிறர் தும்மும் போதும், குழந்தையை பிறர் முத்தமிடும் போதும் கூட எதிர்ப்பு சக்தி குறைவால் குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பாகிவிடும்.

குறிப்பாக தொட்டில், படுக்கையில் சிறுநீரால் ஏற்பட்ட ஈரப்பதம் இருந்தாலும் காற்றில் கிருமி தொற்று குழந்தையை பாதிக்கும்.

அதனால் சிறுநீர் கழித்தவுடன் துணிகளை மாற்றிட வேண்டும்.

தடுப்பூசி செலுத்திய பின்பும் தொடர்ந்து மூக்கு ஒழுகுதல், சளி தொந்தரவு இருந்தால் டாக்டர்களிடம் சிகிச்சை எடுத்து கொள்வது அவசியம்.