சிறுநீரக கல் ஏன் வருகிறது? எப்படி சரி செய்யலாம்?

சிறுநீரில் உள்ள உப்புக்கள், கனிமங்கள் அதிகமாக செறிந்து ஒன்று சேரும் போது கடினமான துகள்களாக உருவாவது தான் சிறுநீரக கல்.

இவை முதலில் சிறுநீரகத்தில் உருவாகி, பின்னர் சிறுநீர்க் குழாய் வழியாக கீழே நகரும் போது திடீரென கடுமையான இடுப்பு வலியை ஏற்படுத்தும்.

போதுமான அளவு தண்ணீர் குடிக்காத பழக்கத்தால் இந்த நோய் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அதனால் தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

சிறுநீரக கல் இருந்தால், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும்.

வாந்தி, காய்ச்சல், சிறுநீரில் ரத்தம் காணப்படுதல், திடீரென கடுமையான இடுப்பு வலி ஏற்பட்டால் சிறுநீரக கல் இருப்பதற்கான பொதுவான அறிகுறியாக காணப்படுகிறது.

பீட்ரூட், பாதாம், முந்திரி, சாக்லேட், தேநீர், கோகோ, சோயா பொருட்களை தவிர்க்க வேண்டும்.

ஒரு நாளில் 5 கிராமிற்கும் குறைவாக உப்பு பயன்படுத்த வேண்டும்.

ஜங்க் உணவு மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்களை தவிர்க்க வேண்டும்.

உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.