பெண்களுக்கு பிடித்த கொரியன் கிளிப்!

ஃப்ரீ ஹேரை விரும்புவர்கள் தற்போது இந்த வகை கிளிப்புகளில் அதிக நாட்டம் கொள்கின்றனர். இந்த கிளிப்களை அணியும்போது ராயல் லுக் கிடைக்கிறது என்பதுதான் இதன் ஸ்பெஷல்.

ஃப்ரீ ஹேர் சைட் ஹோல்டர் கிளிப்களை முகத்தின் இரு பக்கங்களிலும் கூந்தல் விழாமல் இருக்க அணியலாம். இது மெட்டல் மற்றும் பிளாஸ்டிக்கில் கிடைக்கிறது.

மேலும், பக்கவாட்டில் அணியும் வகையில் சிம்பிள் மற்றும் சிறந்த டிசைன்களிலும் கிடைக்கிறது. இவ்வகை கிளிப்கள், கிராண்டான கவுன்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

ஹேர் க்ளிட்சர் கிளிப்கள் இருபக்கமும் கூந்தலை எடுத்து பிணைத்துக் கொள்ளும் விதத்தில் இருக்கும். பொதுவாக பெண்கள் பலரும் பயன்படுத்தும் இவ்வகை கிளிப்கள், தற்போது கொரியன் டிசைனிலும் கிடைக்கின்றன.

அடுக்கடுக்காக வரும் பட்டாம்பூச்சி டிசைன்கள், பெண்களுக்கு பிடித்தமான ஒன்றாக உள்ளது.