உலக விலங்குகள் தினம் இன்று !
பூமியில் பலவகை விலங்குகள் உள்ளன. இவை பல வழிகளிலும் உதவுகின்றன.
விலங்குகளை பாதுகாப்பது, வேட்டையாடுவதை தடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அக்.,4ல் உலக விலங்குகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
விலங்குகள் நல ஆர்வலரான இத்தாலியின் பிரான்சிஸ் ஆப் அசிசியின் நினைவு நாளை குறிப்பிடும் வகையில் 1931ல் இத்தினம் துவக்கப்பட்டது.
சில இடங்களில் உலக விலங்கு நல தினம் அல்லது உலக விலங்கு பாதுகாப்பு தினம் என்ற பெயர்களில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
இவை வீடு மற்றும் காட்டு விலங்குகள் என பிரிக்கப்படுகின்றன. பெரும்பாலானவை பாலுாட்டி வகையை சேர்ந்தவை.
'விலங்குகளை பாதுகாத்தல், பிரபஞ்சத்தை பாதுகாத்தல்' என்பது இந்தாண்டின் மையக்கருத்தாக உள்ளது.