இளம் பெண்களை தாக்கும் லூபஸ்: அறிகுறிகள் அறிவோமா...
பெண்களை பிரத்யேகமாக பாதிக்கும் நோய் லுாபஸ். இது, ஆண்களுக்கு அரிதாகவே வரும். அதே நேரத்தில், பெண்களை விடவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
முடி உதிர்வது, காய்ச்சல், படபடப்பு, அன்னத்தில் புண் வருவது, வெயிலில் போனால் தோல், முகம் சிவந்து போவது, கன்னத்தில் வண்ணத்துப் பூச்சி போன்ற தடிப்பு ஆகியன அறிகுறிகள்.
நான்கு வயது குழந்தையில் இருந்து யாருக்கும் வரலாம். மிக அதிகமாக பாதிப்பது, 20 - 40 வயதிற்குள் தான். தமிழில் இதற்கு செஞ்சரும பல்லுறுப்பு சிதைவு நோய் என்று பெயர்.
இளம் பெண்களுக்கு மூட்டு வலியாக வரலாம். சர்க்கரை நோய் போன்று எல்லா உறுப்புகளையும் பாதிக்கும்.
சர்க்கரை நோயில் நீண்ட நாட்கள் கழித்தே சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். இதில், முதலில் பாதிக்கப்படுவது சிறுநீரகங்கள் தான்.
சில பெண்களுக்கு வலிப்பு வரலாம்; நரம்பியல் பாதிப்புடன் மனநல பாதிப்பு, மனக் குழப்பங்கள் வரலாம். பகலில் துாக்கம் வரும்; இரவில் வராது.
மரபியல், சுற்றுச்சூழல் இரண்டும் தான் இதற்கு பிரதான காரணம்.