ஜீரோ பேலன்ஸ்... நவீன காலத்துக்கான புதிய சூத்திரம் என்ன தெரியுமா?
'இன்று வாங்கி, பின்னர் பணம் கட்டும்' இன்றைய டிஜிட்டல் யுகத்தில், பலரும் தேவைகளுக்காக வாங்குவதை விட ஆடம்பரப் பொருட்களுக்காகவே கடன் வாங்குகின்றனர்.
ஓய்வுக்காலம் அமைதியாக இருக்க வேண்டுமானால், தற்போதைய ஆண்டு வருவாயைப் போல், 25 மடங்கு சேமிப்பு இருக்க வேண்டும் என்பது நிபுணர்களின் கூற்றாகும்.
சேமிப்புக்கான பழைய சூத்திரத்தின்படி, வருவாயில் 50 % அடிப்படைத் தேவைகளுக்கும், 30 % விருப்ப செலவுகளுக்கும் 20 % சேமிப்புக்கும் பயன்படுத்த வேண்டும்.
பல இளைய, மத்திய வயது இந்தியர்களால், தங்கள் வருவாயில் 10 % கூட சேமிக்க முடியவில்லை. இதற்கு, தேவையற்ற செலவுகளும், பணவீக்கமுமே காரணம்.
பர்சனல் லோன், கிரெடிட் கார்டு, தங்க அடமானம் ஆகிய பாதுகாப்பில்லாத கடன்கள், ஒவ்வோர் ஆண்டும் 25 % அளவுக்கு உயர்ந்து வருகின்றன.
வருவாயில் 20 % சேமித்தால் போதும் என்ற பழைய ஆலோசனை இனி உதவாது. இளைஞர்கள், தேவையற்ற செலவுகளைக் கடுமையாக குறைத்து, 40 % அளவுக்குச் சேமிக்க வேண்டும்.
பழைய சூத்திரம்: வருவாய் - செலவினங்கள் = சேமிப்பு, புதிய சூத்திரம்: வருவாய் - சேமிப்பு = செலவினங்கள். எனவே, முதலில் சேமியுங்கள். பின் மிச்சம் மீதியிருப்பதை செலவு செய்யுங்கள்.