பெண் குழந்தைகளை பாதுகாக்கும் 'செர்வாவேக்' தடுப்பூசி...
'ஹியூமன் பேப்பிலோமா' வைரஸ் தொற்று, கர்ப்பப்பை வாய் கேன்சருக்கு காரணம்.
கர்ப்பப்பை வாய் தவிர, மீன் செதில் போன்று மென்மையான திசுக்கள் உள்ள வாயின் உட்புறம், மலக்குடல், பிறப்புறுப்பின் வெளிப்புறம், உள்தொண்டை, பிறப்புறுப்பு போன்றவற்றிலும் தொற்றை ஏற்படுத்தலாம்.
மிதமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மற்ற வகை ஹெச்பிவி வைரசால், இருபாலரின் பிறப்புறுப்புகளிலும் தொற்று வரலாம். கேன்சராக மாறும் அபாயம் உள்ள இதை குணப்படுத்துவது கடினம்.
ஹெச்பிவி வைரஸ் தொற்று கேன்சராக மாற 15 ஆண்டுகளாகும்.
ஹெச்பிவி வைரஸ் தடுப்பூசி, 2006ல் லைசென்ஸ் பெறப்பட்டது. இன்று ஆறு வகையான தடுப்பூசிகள் முறையாக லைசென்ஸ் பெறப்பட்டு நடைமுறையில் உள்ளன.
திருமண வயதிற்கு முன்பாகவே பெண் குழந்தைகளுக்கு, 8 - 14 வயதிற்குள் தடுப்பூசி போடுவது பாதுகாப்பானது.
ஆறு மாத இடைவெளியில், 0.5 மில்லி வீதம் இரண்டு டோஸ் போட வேண்டும்.
கர்ப்பப்பை வாய் கேன்சரை முற்றிலும் ஒழிக்க, 90 - 70 - 90 என்ற திட்டத்தை உலக சுகாதார மையம் வெளியிட்டு உள்ளது.