இன்று பிரிவினையின் நினைவு தினம்

இந்தியாவில் இருந்து 1947 ஆக.14ல் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது.

அப்போது நிகழ்ந்த வன்முறை, வெறுப்பு, துன்புறுத்தல்கள் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

உலகின் பெரிய இடப்பெயர்வாக அது அமைந்தது.

பிரிவினையின் வலியை ஒரு போதும் மறக்க முடியாது.

அதற்காக மத்திய அரசு சார்பில் ஆக.14ல் பிரிவினை கொடுமையின் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

நம் மக்களின் போராட்டங்கள், தியாகங்களின் நினைவாகவும், தேச ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

பிரிவினையின் போது பாதிக்கப்பட்டவர்களின் மன உறுதியை போற்றி, தேசத்தின் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும்.