ஆவாரை பூத்திருக்க, நோவாரை கண்டதுண்டோ? அதில் ஒரு டீ போடலாமா… 
        
ஆவரம் பூக்களை சூரிய ஒளியில் உலர்த்தி பொடி செய்து காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைக்கவும். இதை மூலிகை தேநீராக்கி குடிக்கலாம். 
        
இத்தேநீரை தினமும் நீரிழிவு நோயாளிகள் பருகி வந்தால்  நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.   
        
இதை பருகுவதால் கல்லீரலில் இருக்கும் நச்சுக்களும் நீங்கி, கல்லீரல் பலப்படும். 
        
ஆவாரம் பூ டீ தயாரிக்கும் முறை குறித்து அறிந்துக்கொள்ளலாம்.  
        
இதெல்லாம் தேவை : ஆவாரம்பூ பொடி - ஒன்றரை டீஸ்பூன்,  இஞ்சி- சிறிய துண்டு , பனங்கற்கண்டு - தேவைக்கு ஏற்ப, மிளகு - ½ டீஸ்பூன், தண்ணீர்  ஒரு கப், ஏலக்காய் - 2 
        
ஆவாரம் பூ பொடி, பனங்கற்கண்டு, ஏலக்காய், மிளகு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். 
        
அடுப்பில் வாணலியை வைத்து தண்ணீர் ஊற்றி அத்துடன் இஞ்சி, ஆவராம் பொடி கலவையைச் சேர்த்து கொதிக்கவிடவும். நிறம் மாறியதும், இறக்கி வடிகட்டி குடிக்கவும்.