உதட்டில் புண் ஏற்பட ஓவர் டோஸ் மருந்து, மாத்திரைகள் காரணமா?
குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை, அவர்களின் வயது மற்றும் உடல் தன்மையை பொறுத்து ஊசி, மருந்து வழங்கப்படுகிறது.
தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஊசி மருந்து எடுத்துக் கொண்டவர்கள், டாக்டர்கள் அறிவுரையின் படி சாப்பிட்ட பின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆனால், பெரும்பாலானோர், சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் வெறும் வயிற்றில் மாத்திரைகளை உட்கொள்கின்றனர் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
இதனால் வயிற்றில் வலி ஏற்பட்டு வாய் மற்றும் உதட்டில் புண் ஏற்படுகிறது என கூறப்படுகிறது.
உதட்டில் ஏற்படும் புண்ணை பொதுவாக கிராமப் பகுதிகளில் பல்லி எச்சமிட்டதாகவும், ஊசி மருந்து அதிகம் எடுத்துக் கொண்டதாலும் ஏற்பட்டுள்ளதாக கூறுவார்கள். அது முற்றிலும் தவறான கருத்து.
உதட்டில் ஏற்படும் புண் உதடு அக்கி ஆகும். இது, உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் முறையாக உணவு ஆகாரம் எடுத்துக் கொள்ளாமல் மாத்திரைகள் போடுவதாலும் ஏற்படும்.
மேலும் துாக்கமின்மை, மன அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு உள்ளிட்ட காரணங்களாலும் ஏற்படுகிறது.
டாக்டரின் பரிந்துரையின் படி உணவு உட்கொண்ட பின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பிரச்னை இல்லை. பவரான டோஸ் மாத்திரை மருந்து என்பதே தவறான பார்வை.