இரவு நேரத்தில் சருமத்தில் அரிப்பு இருக்கா?: ஆரம்ப கவனிப்பு அவசியம்..!
சிலருக்கு இரவு நேரங்களில் அவ்வபோது அரிப்பு உண்டாகும். இது இயல்பு
என்றாலும் அரிப்பு தோலழற்சி குறித்து தெரிந்துக் கொள்வதும் அவசியமாகும்.
உடல் வெப்பநிலை, ஈரப்பதம் அல்லது தோலின் ஈரப்பதம் மற்றும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் இரவில் அரிப்புக்கு பங்களிக்கும்.
சருமத்தில் ஈரப்பதம் குறையும் போது வறட்சியால் அரிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க தூங்குவதற்கு முன்பு ஈரப்பதமூட்டும் கீரிம் வகைகள், மாய்ஸ்சரைசர் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
சருமத்தை
நீரேற்றமாக வைத்திருக்கவும் நோய்த்தொற்றுகளை தடுக்கவும் குளிப்பது
முக்கியமாகும். குறைந்தது 3 நிமிடங்கள் சருமம் நீரேற்றத்துடன் இருக்க
வேண்டும்.
சருமம் வறண்டு போனால் அரிப்பு தலைதூக்கும். இதை தடுக்க அவ்வப்போது, ஈரத்துணியால் துடைப்பது சிறந்ததாகும்
சரும அரிப்பால் அவதிப்படுபவர்கள் கம்பளி ஆடை, பாலிஸ்டர், அழுத்தமான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். சுத்தமான பருத்தியால் ஆன மெல்லிய ஆடைகளை அணிவதே சிறந்தது ஆகும்.