உங்கள் சமையல் ருசிக்க எளிய டிப்ஸ்!

ஆப்பத்திற்கு மாவு அரைக்கும் போது மீந்துபோன சாதத்தை சேர்த்து அரைக்கலாம்.

வாழைத்தண்டு கூட்டு செய்யும் போது பாசிப்பருப்பு சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.

உளுந்து வடை செய்யும் போது நிறைய கொத்தமல்லி இலைகளை சேர்த்தால் வடை வாசனையாக இருக்கும்.

வெங்காயத்தை பிளாஸ்டிக் பையில் போட்டு, சில மணி நேரம் குளிர்சாதனப்பெட்டியில் வைத்த பின், வெங்காயத்தை நறுக்கினால் கண் எரிச்சல் ஏற்படாது.

அடை மாவில் துருவிய கேரட், கோஸ் சேர்த்து அடை செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

வெண்டைக்காய் பொரியல் செய்யும் போது புளித்த மோர் சேர்த்து கொண்டால், வெண்டைக்காய் மொறுமொறுப்பாக இருக்கும்.

பருப்பு உருண்டை குழம்பு செய்யும் போது, உருண்டைகளை பொரித்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.