உடல் சூட்டை போக்கும் கிர்ணி பழ லஸ்ஸி!

கிர்ணி பழத்தில் வைட்டமின் ஏ, இ, சி, பீட்டா கரோட்டின், பொட்டாசியம், மாங்கனீஸ் ஆகியவை நிறைந்துள்ளன.

இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண்ணின் விழித்திரை சேதமடைவதை கட்டுப்படுத்த உதவும்.

பெண்களுக்கு மாதவிடாய் போது ஏற்படும் அடிவயிற்று சூட்டை போக்கும். மேலும் மலச்சிக்கலை விலக்கும்.

இவற்றில் மிகக் குறைவான கிளைசிமிக் இன்டெக்ஸ் இருப்பதால், நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது.

இதில் லஸ்ஸி செய்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியடையும். அதை எப்படி செய்வது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்: தோல் சீவி நறுக்கிய கிர்ணி பழ துண்டு - ஒரு கப், சர்க்கரை - 3 தேக்கரண்டி, புளிக்காத தயிர் - ஒரு கப், ஐஸ்கட்டி தேவையான அளவு.

ஐஸ் கட்டி தவிர மற்ற அனைத்தையும் மிக்சியில் போட்டு அரைக்கவும்; பின், இதனுடன் ஐஸ் கட்டி சேர்த்து பருகவும்.

இதை அடிக்கடி குடித்து வந்தால் குடலின் உட்புறத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும்.