முகப்பொலிவை கூட்டும் பதிமுகம் நீர்!
கேரளாவில் அதிகமாக பயன்படுத்தும் பதிமுகம் நீர், உடலில் உ ள்ள கழிவுகளை இயற்கையான முறையில், வெளியேற்றும் தன்மை கொண்டது என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பதிமுகம் நீரில், 'பிரேசிலின்' என்ற வேதிப்பொருள் இயற்கையாகவே உள்ளது. இது தான், பதிமுக மரப்பட்டைக்கு சிவப்பு நிறத்தையும் கொடுக்கிறது.
இதனால், வாய் துர்நாற்றத்தை குறைக்கும். பற்சிதைவைத் தடுத்து, பற்களை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
இது செரிமானப் பிரச்னைகளை குறைக்கும். குடல், ரத்தம் சுத்தமாகும்.
தொடர்ச்சியாக குடித்தால், சருமம் பளபளப்பாவதோடு தோலின் நிறத்தை மேம்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.
'டீன் ஏஜில்' இருப்பவர்களுக்கு வரும் முகப்பருக்களை குறைக்கும்; கரும் புள்ளிகளையும் போக்கும்.
கேன்சரை உண்டாக்கக் கூடிய மோசமான அணு மூலக் கூறுகளை எதிர்த்து போராடும்.பெருங்குடல், உணவுக் குழாயில் வரும் கேன்சர் அபாயத்தைக் குறைக்கும்.
உடல் எடையை சீராக வைக்கும். ரத்த சர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தை பராமரிக்கும். இதனால் இதயம் ஆரோக்கியமாக செயல்படும்.