அமைதியான துாக்கம் தரும் பீச் பழம்!!
குங்குமப்பூ மற்றும் மஞ்சள் நிறமும் கலந்த, பீச் பழங்களின் பூர்வீகம், சீனா நாடு. இதை, 'ஸ்டோன் பழங்கள்' என, அழைக்கின்றனர்.
பேரிக்காய், ஆப்பிள், பாதாம், பிளம் போன்ற ரோசேசியின் தாவரவியல் குடும்பத்தை சேர்ந்த பீச், இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது.
மன அழுத்தம், மனநோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க, பீச் பழங்கள் உதவுகிறது. இரவில் படுக்கும்போது தோலுடன் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், அமைதியான துாக்கம் கிடைக்கும்.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க, பீச் பழம் உதவும். இப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
பீச் பழத்தில், கொழுப்பு எதுவும் கிடையாததால், எடையை குறைக்க விரும்புவோர், இதை சாப்பிடலாம். முடி உதிர்வதை கட்டுப்படுத்துகிறது.
பொட்டாசியம், இரும்பு சத்துக்கள் அதிக அளவில் உள்ளதால், உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. மார்பு சளி, வறட்டு இருமல், தொண்டை புண் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.
கருவில் உள்ள குழந்தைக்கு நரம்பு குழாய் குறைபாடு ஏற்படுவதை தடுக்கிறது.
சிறுநீரகத்தில் உருவாகும் கல் மற்றும் கட்டிகளை தடுப்பதுடன், சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரகப்பையில் உள்ள நச்சுக்களையும் நீக்க உதவுகிறது.