சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை...

சுக்கை இழைத்து பற்று போட தலைவலி நீங்கும்

சிறு துண்டு சுக்கை வாயில் இட்டு மென்று அடக்கி வைக்க, பல்வலி தீரும்

சுக்கை நசுக்கி ஒரு துணியில் சிறு மூட்டை கட்டி, காதில் வைக்க, காதடைப்பு, நீரடைப்பு பிரச்னை தீரும்

சுக்குப்பொடி வெந்நீரில் கலந்து குடிக்க அஜீரணம் நீங்கும். உஷ்ணம், பேதி, சீதபேதி மற்றும் வாந்தியை கட்டுப்படுத்தும்

மார்பு எரிச்சல், வயிற்று வலி, நெஞ்சு வலி, புளியேப்பம் ஆகியவற்றை போக்கும்

வயிற்றுப் பொருமல், வயிற்றுப்பசி நோயைத் தீர்க்கும். வயிற்றிரைச்சல், சளி, இருமலைப் போக்கும்

காசம் எனும் ஆஸ்துமா மற்றும் சைனஸ் நோய்களை கட்டுப்படுத்தும்

இதய நோய்கள் மற்றும் காய்ச்சலை கட்டுப்படுத்தும்

நரம்புகள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்

தினமும் சிறிதளவு சுக்கை நாம் உட்கொள்ள நோய்கள் வராமலும், வந்த நோய்கள் நீங்கவும் பேருதவியாக இருக்கும்.