அலர்ஜியை தவிர்க்க என்ன செய்யலாம்?
உடலில் ஊறலும் அரிப்பும் ஏற்படுவது கோடைகாலத்தில் துாசி அலர்ஜியால் ஏற்படலாம்.
தடிப்பும் சூடும் இருந்தால் அந்த அலர்ஜி எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டறிய டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.
வெளியில் விளையாடி விட்டு வந்தால் உடனடியாக கை, கால்களை கழுவ வேண்டும்.
குறிப்பாக கை நகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சாப்பிடும் உணவால் கூட உடலில் தடிப்பு அலர்ஜி ஏற்படலாம். அவற்றை கண்டறிந்து தவிர்க்கவும்.
அரிப்பு ஏற்படும் போது அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.
சிலருக்கு சில காய்கறிகள் சாப்பிடுவதும் அலர்ஜியை ஏற்படுத்தும். அவற்றை தவிர்க்கலாம்.
மருத்துவர் ஆலோசனைப்படி ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெற்றால் விரைவில் குணமாகும்.