ஆலங்கட்டி மழை பெய்வது எப்படி?

வெயில் காலத்தில் நிலத்திற்கு அருகிலுள்ள காற்று அதிக வெப்பமடைகிறது.

மேல் நோக்கி சென்று உறை வெப்ப நிலையில் சிறிய பனிக்கட்டிகளாகிறது. அவை சூடான காற்றோடு விழுவதால் சுற்றி தண்ணீர் படிகிறது.

மேலே செல்லும் காற்று மறுபடியும் அந்த பனிக்கட்டியை குளிர்நிலைக்கு கொண்டு செல்கிறது.

இது முந்தைய பனிக்கட்டியின் மேல் மேலும் பனி உருவாகிறது.

இப்படி சூடான, குளிர்ந்த காற்றுக்கு நடுவே மேலும், கீழும் பலமுறை துாக்கி செல்வதால் பனிக்கட்டிகள் சேர்ந்து ஆலங்கட்டியாக மாறி எடை அதிகரிக்கிறது.

பின் எடை தாங்காமல் ஆலங்கட்டி மழையாய் பூமியில் விழுகிறது.