உடல் பருமன் என எப்படி கண்டுபிடிப்பது?
அவரவரின் உடல் அமைப்பிற்கு ஏற்ற நிலையில், உடல் எடை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
சராசரியாக இருக்க வேண்டிய உடல் எடையில் இருந்து, 20 கிலோ அதிகமாக இருந்தால், அதை உடல் பருமன் எனலாம்.
பொதுவாக பலரும் நினைப்பது போல, அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிடுவதால், உடல் எடை அதிகரிக்கிறது என்பது உண்மையில்லை.
சரியான நேரத்தில் உணவு சாப்பிடாமல் இருந்தால் கூட உடல் எடை அதிகரிக்கக்கூடும்.
துரித உணவு, அதிக குளிர்ச்சியான உணவு, துாக்கமின்மை, மனச்சோர்வு, அதிக நேரம் துாங்குவது, உடற்பயிற்சியின்மை, ஹார்மோன் குறைபாடுகள் போன்ற பல காரணங்களால் செரிமானம் மந்தமாகும்.
இதனால், உடலில் கழிவுகள் தேக்கமடைந்து, சரியான ரத்த சுழற்சி இல்லாமல், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
உடல் எடையை குறைக்க முயற்சி செய்வதற்கு முன், டாக்டரின் ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும். உணவு முறைகள், உடற்பயிற்சிகளை தெளிவாக பின்பற்ற வேண்டும்.