'ஆதாரை' வேறு யாராவது பயன்படுத்தி உள்ளனரா என எப்படி அறிவது?
ஆதார் குறித்த தகவல்களை அறிய https://myaadhaar.uidai.gov.in/ என்ற லிங்கில் சென்று, உங்களுடைய ஆதார் எண்ணைக் கொண்டு உள்ளே நுழையலாம்.
செல்போனுக்கு ஓ.டி.பி., வரும். அதை உள்ளிட்டு, இந்த வலைதளத்துக்குள் சென்றால், அங்கே 'ஆதன்டிகேஷன் ஹிஸ்டரி' என்றொரு பகுதி வரும்.
அதை கிளிக் செய்து உள்ளே சென்றால், எந்த தேதியில் இருந்து எந்த தேதி வரை விபரம் வேண்டும் என்று கேட்கும்.
அப்போது உங்களுக்கு தேவையானதை குறிப்பிட்டு சப்மிட் செய்தால், அந்தக் குறிப்பிட்ட காலத்தில் உங்கள் ஆதார் அடையாள அட்டை எங்கேயெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற வரலாறு தெரியும்.
அதில் நீங்கள் பயன்படுத்தாமல், சந்தேகத்திற்கிடமான வேறு பயன்பாடுகள் ஏதேனும் இருக்குமானால், 1947 என்ற எண்ணை அழைத்து புகார் செய்யலாம்.
help@uidai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்குப் புகார் செய்யலாம். அல்லது https://myaadhaar.uidai.gov.in/file-complaint என்ற பக்கத்துக்கு சென்று புகார் அளிக்கலாம்.