கர்ப்ப கால நீரிழிவை எப்படி பராமரிப்பது?

பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு பாதிப்பு ஹார்மோன் மாற்றங்களால் உருவாகிறது.

உடலில் கணையம் பாதிப்பதாலும் உருவாகிறது. உடற்பயிற்சி இல்லாத உணவு பழக்கங்களும் தற்போது கர்ப்ப கால நீரிழிவு பாதிப்பை அதிகரிக்கிறது.

பெரும்பாலான பெண்களுக்கு அறிகுறி தெரிவதில்லை. சிலருக்கு அதிகரித்த தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சோர்வு மற்றும் மங்கலான பார்வை போன்ற பாதிப்பு இருக்கலாம்.

இந்த அறிகுறிகள் இருந்தால் அது குழந்தைக்கு பாதிப்பாகும் என்பதை உணர்ந்து கவனமுடன் இருக்க வேண்டும்.

குழந்தையின் எடை அதிகமாதல், தாய்க்கு ரத்த அழுத்தம் அதிகரித்தல் உள்ளிட்டவை ஏற்படலாம்.

உரிய காலத்தில் பரிசோதனை செய்து டாக்டரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்; உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.

அதிகமாக புரோட்டீன் உள்ள உணவு, கீரை வகைகள், தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குழந்தை பிறக்கும் வரை டாக்டரின் ஆலோசனைப்படி நடந்து கொள்வது அவசியமாகும்.