குழந்தைகளுக்கு சரியாக பேச்சு வராவிட்டால் ஆட்டிசம் குறைபாடா?
ஆட்டிசம் ஒரு நரம்பியல் தொடர்பான வளர்ச்சி குறைபாடு.
இதனால் பாதிக்கப்படும் குழந்தைகள் சமூகத்தில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் திறன், பழகும் திறனில் பின் தங்கியிருப்பர்.
ஆட்டிசம் அறிகுறியுள்ள குழந்தைகளுக்கு பேசும் திறன் இருக்காது. சில குழந்தைகள் பேசினால் தெளிவாக புரிந்து கொள்ளும்படி இருக்காது.
கண், மூக்கு, வாய், காது, சருமம் ஆகிய புலன்களின் உணர்வுகளில் மாறுபாடு இருக்கும்.
அந்த புலன் சார்ந்த துாண்டல்களுக்கு அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உணர்ச்சிகளை வெளிகாட்டுவார்கள்.
குழந்தைகளின் பேச்சு தாமதம் ஆவதற்கு காரணம் ஆட்டிசம் மட்டுமே இருக்க இயலாது.
சில குழந்தைகளுக்கு இயற்கையாகவே பேச்சுத்திறன் வர தாமதம் ஆகலாம்.
சந்தேகம் தொடரும் பட்சத்தில் குழந்தைகள் நல மருத்துவரையோ, மனநல மருத்துவரையோ அணுகி ஆலோசனை பெற வேண்டும்.