30 வயதிற்குப் பிறகு பெண்கள் செய்ய வேண்டிய முக்கிய மருத்துவ பரிசோதனைகள்!!
பொதுவாகவே பெண்களின் உடலில் 30 வயதிற்குப் பிறகு பல மாற்றங்கள் நடக்கின்றன. குறிப்பாக சமச்சீரற்ற ஹார்மோன்கள், பலவீனமாகும் எலும்புகள் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
மாறியுள்ள வாழ்க்கை முறை மாற்றத்தால் மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமுள்ளதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர்.
எந்த பாதிப்பாக இருந்தாலும் முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் பல சிக்கலை தவிர்க்கலாம். அதற்கு 30 வயதை கடந்தப் பெண்கள் செய்யவேண்டிய முக்கிய பரிசோதனை என்னென்ன என பார்ப்போம்.
ரத்தசோகை பிரச்னையை கண்டறியும் ரத்த அணுக்கள் எண்ணிக்கை சோதனை
தைராய்டு பரிசோதனை
மார்பகப் புற்றுநோய் கண்டறியும் சோதனை
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சோதனை
எலும்பு பலவீனத்தை கண்டறியும் கால்சியம், டி3 பரிசோதனை