இன்று சர்வதேச நண்பர்கள் தினம்
ஐ.நா., சார்பில் ஜூலை 30ல் சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
இத்தினம் நாட்டில் உள்ள மக்களுக்கு இடையே அமைதியை வளர்க்கும் ஒரு முக்கிய முயற்சியாகும்
நண்பர்கள் தினம் பல நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் இது ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது
குடும்பத்துக்குள் பகிர்ந்து கொள்ள முடியாத பல விஷயங்களை நண்பர்களுக்குள் பகிர முடிகிறது.
ஒவ்வொருவருக்கும் நண்பர்கள் இருப்பது பெரிய பலம் தான்.
நாடு, மதம், ஜாதி, மொழி, ஏழை, பணக்காரர் உட்பட பல வேறுபாடுகளை கடந்தது நட்பு.
உறவுகள் இயற்கையாக வருவது. நண்பர்கள் மட்டுமே நாம் தேர்வுசெய்யக்கூடியது.
வாழ்க்கையில் சொத்துகளை அதிகம் சேர்ப்பதை விட நண்பர்களை அதிகம் சேர்ப்பது முக்கியம்.