கேரளா ஸ்பெஷல் உப்பிலிட்ட நெல்லிக்காய் ரெசிபி இதோ!
கேரளாவில் உள்ள பெரும்பாலான பெட்டி கடைகளில் உப்பிலிட்ட நெல்லிக்காய்களை கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்திருப்பர். இதை எப்படி வீட்டிலே செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் - l நெல்லிக்காய் - 1 1/2 கிலோ, l வினிகர் - 3 டீஸ்பூன், l பச்சை மிளகாய் 15 மிளகாய், l உப்பு - நான்கு கைப்பிடி
செய்முறை : நெல்லிக்காயை உப்பு தண்ணீர் போட்டு நன்கு கழுவி, நெல்லிக்காய் மீது தண்ணீர் இல்லாமல் துணியால் துடைத்து கொள்ளவும். இதே போல மிளகாயை தண்ணீரில் போட்டு, துடைத்து கொள்ளவும்.
பெரிய மண் பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீரை ஊற்றி சூடாக்க வேண்டும். இதில், நான்கு கைப்பிடி உப்பு, வினிகர் சேர்க்கவும். தண்ணீர் கொதித்த பின், இதில் நெல்லிக்காயை போடவும்.
ஐந்து நிமிடங்களுக்கு பிறகு, அடுப்பை அணைத்து கொள்ளவும். இதற்கிடையில், பச்சை மிளகாயை நடுவாக்கில் இரண்டாக கீறி கண்ணாடி பாட்டிலில் போட வேண்டும்.
இதில், கொதிக்க வைத்த நெல்லிக்காய்களையும் போட வேண்டும். பின், கொதிக்க வைத்த நீரை பாட்டிலில் ஊற்றி கொள்ளவும். பின், ஒரு கரண்டியால் கண்ணாடி பாட்டிலில் நன்றாக கலக்கவும்.
இதை இரண்டு வாரம் காலை, மாலை வெய்யிலில் காய வைக்க வேண்டும். பிறகு, நெல்லிக்காயை எடுத்து சாப்பிட்டலாம்.