காவல்துறை சார்ந்த முக்கிய உதவி மற்றும் வாட்ஸ்அப் எண்கள்...
சென்னை பெருநகர காவல் துறையின் தெற்கு மண்டலத்தில் புகார்களின் மீது CSR (மனு ஏற்பு ரசீது) அல்லது FIR (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்ய தாமதம் ஏற்பட்டால் அச்சம் வேண்டாம்.
அதுகுறித்து, பொதுமக்கள் புகார் அளிப்பதற்காக பிரத்யேக வாட்ஸ்அப் எண் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை தெற்கு மண்டலதிற்கு உட்பட்ட CSR / FIR தாமத புகாருக்கு 24*7 இணை ஆணையர் அலுவலக உதவி வாட்ஸ்அப் எண் 7200844100 ஆகும்.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பது குறித்து ஆதாரங்களுடன் புகார் அளிக்க தமிழக அரசு வெளியிட்டுள்ள வாட்ஸ்அப் எண் 9498180936.
தமிழக காவல்துறை செய்திகள் / அப்டேட்டுகள் பெற 9498111191 என வாட்ஸ்அப்பில் 'JOIN' என்று அனுப்பினால் அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைக்கும்.
ஆன்லைன் பண மோசடி போன்ற சைபர் கிரைம் குற்றங்களுக்கு உடனடியாக அழைக்க வேண்டிய உதவி எண் 1930.
உங்கள் புகார்களின் தற்போதைய நிலையை (CSR / FIR Status) நேரில் செல்லாமல் ஆன்லைன் மூலமாகவும் நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் புகார் அளிக்க அல்லது நிலையை அறிய தமிழக காவல் துறை அதிகாரப்பூர்வ இணையதளம் பக்கத்தைப் பார்வையிடலாம்.
சைபர் குற்றங்கள் குறித்த புகார்களைப் பதிவு செய்ய தேசிய சைபர் கிரைம் போர்ட்டல் இணையதளத்தைப் பயன்படுத்தலாம்.