அன்பாகச் சொன்னால்... புத்தரின் தன்னம்பிக்கையூட்டும் வரிகள் !
அதிகாரத்தால் யாரையும் பணிய வைக்க வேண்டாம். அன்பாகச் சொன்னால் எதிர்பார்த்ததை விட பணி சிறக்கும்.
ரகசியத்தைக் காப்பாற்றுபவனே நல்ல நண்பன். நல்ல நட்பு ஒருவனுக்கு வாழ்க்கை முழுவதும் கை கொடுக்கும்.
பெற்றோருடன் வசித்தல், குடும்பம் பேணுதல், அமைதியாக வாழ்தல் இவற்றை பெற்றவனே பாக்கியசாலி.
உண்மை ஒன்றே உலகில் என்றும் நிலைத்து நிற்கும் தகுதியைப் பெற்றிருக்கிறது.
தான் துன்பத்தில் கிடந்தாலும், மற்றவருக்கு துன்பம் நினைக்காமல் வாழ்பவனே உயர்ந்த மனிதன்.
தன்னைத் தான் வென்றவன், ஆயிரம் வீரர்களை வென்ற வீரனைக் காட்டிலும் சிறந்தவன்.
அருகில் இருப்போர் மகிழ்ச்சியாக இருந்தால், அதில் பங்கு கொள்ளுங்கள். துன்பத்திலும் இதை கடைபிடியுங்கள்.
பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்.
ஒவ்வொரு கணப் பொழுதும் இனிமையானது. அதை அனுபவித்து மகிழக் கற்றுக் கொள்ளுங்கள்.
யாரையும் எதிரியாக நினைக்காதே. இல்லாவிட்டால், உனக்கு நீயே துன்பத்தைத் தேடிக் கொள்வாய்.
உண்மையை மாற்ற முடியாது. அதை மறைக்கும் வலிமை யாருக்கும் இல்லை.