உணவு வீணாவதை தவிர்ப்போமே... உலக பட்டினி தினம் இன்று !

உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உலக பட்டினி தினம் கடைபிடிக்கப்படுகிறது. எனவே, உணவு வீணாவதை தவிர்க்க இதோ டிப்ஸ்...

வீட்டிலும் சரி, வெளியேவும் சரி, உணவு தட்டில் உங்களுக்கு தேவையான அல்லது உங்களால் சாப்பிட முடிகிறளவு உணவை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

வீட்டில் தேவையானளவுக்கு மட்டுமே உணவை தயாரித்து, சாப்பிடுங்கள். அப்போது, உணவு கெட்டுப்போய் தூக்கி வீசுவதை தவிர்க்கலாம்.

ஷாப்பிங் செல்லும்போது தேவையான உணவு, மளிகைப் பொருட்களை மட்டும் வாங்கவும். தள்ளுபடி விலை, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்றால் கூட, அதிகமாக வாங்கி வீணாக்காதீர்.

வெளியில் உணவகத்தில் சாப்பிட்டு மீந்த உணவை பார்சல் செய்து வீட்டுக்கு எடுத்து செல்லுங்கள்.

உணவுப் பொருட்களை வாங்கும்போது, அவற்றின் காலாவதி தேதிகளை கவனித்து வாங்குங்கள்.

அப்படியே உணவு வீணானாலும், குப்பையில் தூக்கி வீசாமல் அதை இயற்கை உரமாக மாற்றி பயன்படுத்துங்கள்.

உணவை வீணாக்குவது ஒரு தேசிய குற்றம். எனவே, உணவை வீணாக்காமல், மரியாதையுடன் உணவு உண்பதை குழந்தைகளுக்கு கற்றுத் தரவும்; நீங்களும் அதைப் பின்பற்றுங்கள்.