மகா சிவராத்திரி விழா கோலாகலம்
நாடு முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் இன்று (மார்ச் 8) மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான காசி விஸ்வநாதர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் லட்சக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய, வழக்கத்தை விட அதிகமானோர் வந்துள்ளனர். அக்கினி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை முன்பு இன்று மாலை மகா சிவராத்திரி விழா நடக்கிறது.
அமெரிக்கா, நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில், மகா சிவராத்திரியை வரவேற்கும் வகையில் மக்கள் உற்சாகமாக ஆடி, பாடி வருகின்றனர்.
இதேப்போல், நாடு முழுவதும் சிவன் கோவில்களில் மக்கள் கூட்டம் கடல் போல் காட்சியளித்தது.