இன்று கைது செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன ஊழியர்களின் ஒற்றுமைக்கான சர்வதேச தினம்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 25ல் ஐ.நா., சார்பில் 'கைது செய்யப்பட்ட காணாமல் போன ஊழியர்களின் ஒற்றுமை தினம்' கடைபிடிக்கப்படுகிறது.

சர்வதேச நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா., சபையின் பணியாளர்களை பாதுகாக்கும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஐ.நா.,வின் பணியின் போது தடுத்து வைக்கப்பட்டுள்ள, காணாமல் போன அல்லது கடத்தப்பட்ட ஊழியர்களின் துணிச்சலைப் போற்றவும், அவர்களுக்காக நீதி கோரவும் கொண்டாடப்படுகிறது.

1945ல் ஐ.நா., சபை தொடங்கிய பின் நுாற்றுக்கணக்கான ஆண், பெண் ஊழியர்கள் பணியில் இருந்த போது உயிரை இழந்துள்ளனர்.

1990களில் ஐ.நா., அமைதிப்படையில் பணியாற்றிய வீரர்கள் பலர் பலியாகினர்.

இதையடுத்து ஐ.நா., ஊழியர்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் இத்தினம் உருவாக்கப்பட்டது.

ஐ.நா.,சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இத்தினம் வலுப்படுத்துகிறது.