இன்று உலக திரையரங்கு தினம்!
ஐ.நா.,வின் யுனெஸ்கோவின் முயற்சியால், 1948ல், சர்வதேச திரையரங்க நிறுவனம் உருவாக்கப்பட்டது.
யுனெஸ்கோ கலாசார துறையின் சார்பில், 1960 முதல், மார்ச், 27ல், இத்தினம் கொண்டாடப்படுகிறது
உலகின் முதல் திரையரங்கு, 1895ல், அமெரிக்காவில் உள்ள, பிட்ஸ்பர்க்கில் கட்டப்பட்டது. அதன் பெயர், நிகெலோடியான்.
இந்தியாவின் முதல் திரையரங்கம், 1907ல், மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 'எல்பின்ஸ்டன் பிக்சர் பேலஸ்' என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.
1913ல், சென்னையில் கட்டப்பட்ட, 'எலக்டரிக் தியேட்டர்' தான், தமிழகத்தின் முதல் திரையரங்கு.
பின் 1914ல் கோவையில் கட்டப்பட்ட டிலைட் தியேட்டர் மிகவும் பிரபலம்.
உலக அளவில், இந்தியாவில் தான், அதிக படங்கள் வெளியாகின்றன.
சினிமாவை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக தியேட்டர்கள் கட்டப்பட்டன. தற்போது பல கோடி நபர்களை அங்கமாக இணைக்கும் கனவு தொழிற்சாலையாக இருக்கிறது.