துணிவுடன் முன்னேறு... பாரதியாரின் தன்னம்பிக்கையூட்டும் வரிகள்!
தைரியம் என்பதற்கு அறிவு, துணிவு என்றும் அர்த்தமுண்டு.
பிறரது துன்பத்தை தீர்க்கும் வகையில் ஆறுதலாக பேசுவதும், ஒரு வகையான தானம் தான்.
வெற்றியிலும், தோல்வியிலும் சமநிலை இழக்காமல், மன உறுதியுடன் வாழ வேண்டும்.
உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருந்தால், நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும்.
யாருக்காவும், எதற்காகவும் பயப்பட வேண்டாம். லட்சியத்தில் உறுதி கொண்டு, துணிவுடன் முன்னேறுங்கள்.
பயம் இருக்கும் வரை அறிவாளியாக முடியாது. எனவே பயத்தை கைவிடு. தைரியமாக செயல்படு.
தர்மத்தின் பாதையில் நீ சென்றால், உனது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.