இன்று உலக ஹலோ தினம்!
எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் 1973ம் ஆண்டு, தங்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை முடிந்த தினத்தை, ஹலோ தினமாக கொண்டாடினர்.
அதன் பிறகு தற்போது 180 நாடுகளில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தின் முக்கிய நோக்கம், ஒவ்வொருவரும் உலக அமைதிக்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதே.
'ஹலா', 'ஹொலா' என்ற ஜெர்மன் மொழி வார்த்தையில் இருந்து ஹலோ' வந்துள்ளது.
'இதற்கு தமிழில் வணக்கம், அழைத்தல், நலம் என அர்த்தம்.
சக மனிதர்களுடனான உறவை மேம்படுத்துவதன் மூலமாக, உலக மக்களிடம் அமைதியை நிலை நாட்ட முடியும்.
அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் டெலிபோனை கண்டுபிடித்தார். ஹலோ என்பது அவரது காதலியின் பெயர். தற்போது அது ஒருவரை ஈர்க்கச் செய்யும் ஒரு வசீகர ஓசை மட்டுமே.
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இத்தினத்தில் நீங்கள் சந்திக்கும் அனைவரிடமும் ஹலோ என்று அன்பாக சொல்லி பேசுவோம்.
இதன் மூலம் சக மனிதர்களுடனான அன்பையும், நேசத்தையும் உறவையும் பலப்படுத்துவோம்.