சத்துகள் நிறைந்த ஓட்ஸ் உப்புமா
தேவையானப் பொருட்கள்: ஓட்ஸ் - 1 கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 1.
கேரட், பீன்ஸ் - 0.50 கப், , பச்சை மிளகாய் - 4, உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானவுடன், கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு லேசாக தாளிக்கவும்.
பின், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். நறுக்கிய கேரட், பீன்ஸ் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
தண்ணீர், உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு, ஓட்ஸ் சேர்த்து மிதமான தணலில் கிளறவும்.
ஒரு சில நிமிடங்களில் தண்ணீர் வற்றி ஓட்ஸ் வெந்தவுடன், அடுப்பிலிருந்து கடாயை இறக்கினால், அவ்வளவு தான், சத்தான ஓட்ஸ் உப்புமா இப்போது ரெடி.