தோல் நோய்களை தடுக்க உதவும் சத்துகளும், உணவுகளும்...
செல் அழிவுகளை தடுத்து, மெருகு ஏற்படுத்தும் வைட்டமின் 'ஏ, பி' சத்து நிறைந்த அடர் நிற கீரைகள், ஆரஞ்சு வண்ண காய்கறிகள், முட்டை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஈரல் ஆகியவற்றை உண்ணலாம்.
இவற்றை தினசரி உணவில் சேர்க்க வேண்டும். இது, தோலில் உள்ள கொலோஜன் திசு உற்பத்திக்கு உதவுகிறது.
வைட்டமின் 'சி' நிறைந்த நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, முருங்கை கீரை, தோலில் உள்ள சுருக்கங்களை போக்கும்.
வைட்டமின் 'இ' அதிகமுள்ள பாதாம், வால்நட், பசலை கீரை, ஓட்ஸ் உணவில் இடம் பெற வேண்டும்.
சிறு மீன்கள், நண்டு, இறால், தோலுடன் கூடிய சிறுதானியங்கள், கைக்குத்தல் அரிசி போன்ற உணவுகளில் செலினியம் அதிகம் உள்ளது.
இது, தோலில் மிருதுவான தன்மையையும், நெகிழ்வு தன்மையையும் பாதுகாக்கும். முகப்பரு, தழும்பு மற்றும் தோல் புற்றுநோயை தடுக்கும்.
தோல் சுருக்கம், காயங்கள், சிராய்ப்பு, சிரங்கை போக்கும், 'ஒமேகா - 3 பேட்டி' அமிலம், மீன் எண்ணெய், ஆளி விதையில் அதிகமுள்ளது.
தோலின் ரத்த செல்களையும் மற்றும் காயமடைந்த செல்களையும் சரி செய்து, புற ஊதா கதிர்களிலிருந்தும் பாதுகாப்பது ஜிங்க் சத்து.