இன்று உலக சுற்றுலா தினம்
ஐ.நா,. சார்பில் செப்.27ல் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது.
வாழ்க்கையில் சுற்றுலா உள்ளிட்ட பயணங்கள் தான் சுவாரஸ்யமானவை.
உலகில் 10ல் ஒருவருக்கு இத்துறை வேலை அளிக்கிறது. லட்சக்கணக்கானோருக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது.
சுற்றுலா செல்வது என்றாலே குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமானது.
இது உலகின் பல்வேறு முக்கியமான இடங்களை, கலாசார பெருமைகளை தெரிந்து கொள்ள உதவுகிறது.
இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில் இன்று இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
'டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் சுற்றுலாவை மறுவடிவமைத்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.