மொட்டை மாடியில் ஏற்படும் வெப்பத்தை குறைக்க என்ன செய்யலாம்?
மொட்டை மாடியில்தான் வெயிலின் தாக்கம் கட்டடத்திலேயே மிக அதிமாக இருக்கும். அதை சமாளிக்க என்ன செய்யலாம் என பார்ப்போம்.
மாடியில் உண்டாகும் அதிக வெப்பத்தை குறைக்க 'கூல் ரூப் கோட்டிங்', 'ஹீட் ரிப்ளெக்டிவ் பெயின்ட்' அடிக்கலாம்.
'கூல் ரூப் டைல்ஸ்' ஓட்டுவதன் மூலமாகவும் வெப்பத்தை கட்டுப்படுத்தலாம். இந்த பொருட்கள் சூரிய வெப்பத்தை பிரதிபலித்து வீட்டுக்குள் வெப்பம் இறங்குவதை குறைக்கும்.
கூல் ரூப் டைல்ஸ் பதிக்கும்போது, டைல்ஸ்களுக்கு இடையே சிறிய இடைவெளி விட்டு பதிக்க வேண்டும். இது வெப்பம் பரவுவதைத் தடுக்கும்
மாடிக்கு மேல் கிரீன் நெட் அல்லது தற்காலிக நிழல் அமைப்புகள் மூலம் நேரடி சூரிய ஒளி படுவதைத் தடுக்கலாம்.
மாடி அறைகளில் போதுமான காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மாடி தோட்டம் அமைத்து செடிகளை வளர்ப்பது, கூரையை நிழலாக வைத்திருப்பதுடன், சுற்றியுள்ள வெப்பநிலையையும் குறைக்கிறது.
பெட் ரூம் மேல் மாடியில் பெரிய தண்ணீர் தொட்டி அமைப்பது வெப்பத்தை உள்வாங்க உதவும்.