கல்லீரலிலுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் சில உணவுகள் !
பூண்டு... நச்சு நீக்கும் செயல்பாட்டை தூண்டுவதுடன், கல்லீரல் சேதத்தை குறைக்கவும் உதவுகிறது.
தக்காளி... ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து கல்லீரலை காப்பதுடன், அதன் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.
பீட்ரூட்... கல்லீரலை சுத்தப்படுத்த உதவுவதுடன், கல்லீரல் செல்களை பாதுகாத்து, கொழுப்பு மாற்றத்தை சீராக்குகிறது.
ஆப்பிள்... உடலிலுள்ள நச்சுக்களை பிணைத்து வெளியேற்றி, கல்லீரலின் சுமையை குறைக்க உதவுகிறது.
கீரை... இவை உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுவதுடன், செரிமானத்தையும் மேம்படுத்தும்.
நச்சு நீக்கத்துக்கு தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்களை அவகாடோ வழங்குகிறது.
எலுமிச்சை... சிட்ரஸ் பழங்கள் பித்தநீர் உற்பத்தியை அதிகரித்து நச்சுகளை வெளியேற்றுகின்றன.
கல்லீரல் செல்களை பாதுகாத்து கொழுப்பு சேர்வதை குறைக்க க்ரீன் டீ உதவுகிறது.