முதியோருக்கு வரும் உடல் சார்ந்த பிரச்னைகள் சில..

வயது முதிர்வால் மூளைக்கு ரத்த ஓட்டம் குறைந்து, செல்கள் அழிவதால், மூளை அளவு சுருங்கிவிடும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

ரத்தம் தடைபடுவதால் ரத்த குழாய் வெடிப்பு, அடைப்பு ஏற்படலாம்.

மூளை உத்தரவிடாமல், உறுப்புகளால் செயல்பட முடியாது. இதனால் பக்கவாதம் ஏற்படலாம்.

சிலருக்கு இதய குழாய்களில் இருந்து வெளியேறும் ரத்தம் கெட்டியாகி உறைந்துவிடலாம். இதனாலும் மூளைக்கு போதிய ரத்தம் செல்லாது.

இ.சி.ஜி. பரிசோதனையில் இதயம் சார்ந்த பிரச்னைகளை கண்டறியலாம். ரத்தம் உறைவதை தடுக்கும் மருந்துகள் அளிக்கலாம்.

தொண்டையில் புற்றுநோய் இருக்கிறதா எனவும் பரிசோதிக்க வேண்டும். இப்படி ஒரு பாதிப்புக்கு பல்வேறு காரணங்கள் இருப்பதால், அலட்சியம் செய்யாமல் சிகிச்சை பெறவேண்டும்.

மூளைச்சிதைவு நோயிற்கு வாய் குளறல் முக்கிய அறிகுறி. அப்போது, சி.டி. ஸ்கேன் மூலம் மூளையில் அடைப்பு உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.

சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் இருப்போர், மூளை, இதயம் சார்ந்த பரிசோதனைகளை ஆண்டுக்கு ஒருமுறை எடுத்து கொண்டால், கண்டுபிடிப்பது சுலபம்.