பற்களின் இடுக்குகளில் கறையா? தீர்வுகள் சில...

உணவு, சாக்லேட், இனிப்பு போன்றவற்றை அடிக்கடி சாப்பிடும் போது அவை பற்களின் இடைவெளியில் தங்கி விடும்.

இதை கவனிக்காமல் விட்டால் நாளடைவில் கறை உருவாகி விடும்.

கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருந்தால் கேவிட்டி இருக்க வாய்ப்பு உள்ளது.

சில குழந்தைகளுக்கு பற்கள் நெருக்கமாக இருப்பதால் உணவு எளிதில் சிக்கிக்கொள்ளும்.

பல் துலக்கிய பிறகும் கறை நீங்காமல் இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

குழந்தைகளின் பற்களை பராமரிப்பதில் பெற்றோரின் பங்கு அவசியம்.

குழந்தைகளுக்கு தினமும் காலை, இரவு பல் துலக்குவதை பழக்கப்படுத்த வேண்டும்.

அதே போல் உணவு சாப்பிட்ட பின் தண்ணீரால் வாயை சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும்.

சிறிய கறை தானே என்று சாதாரணமாக விட்டால் பற்சொத்தை ஏற்பட வாய்ப்பு உள்ளது.