இனிப்பான பலாப்பழ இட்லி ரெசிபி
தேவையானப் பொருட்கள்: அரிசி ரவை, தேங்காய் துறுவல் - தலா 1 கப், பலாப்பழம் சுளைகள் - 2.5 கப், வெல்லம் - 0.5 கப், ஏலக்காய் - 5, உப்பு - 1 சிட்டிகை, நெய் - தேவையானளவு.
அரிசி ரவை இல்லாவிட்டால் வீட்டிலேயே தயார் செய்யலாம். அரிசியை கழுவி ஒரு மணி நேரம், நீரில் ஊற வைத்து, நீரை வடிக்கவும்.
அரிசியை சுத்தமான துணி அல்லது டவல் மீது பரப்பி உலர விட்டு, மிக்சியில் கொரகொரப்பாக அரைத்தால், அரிசி ரவை ரெடி.
பலாப்பழத்தை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்சியில் போட்டு, வெல்லம், தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
இதில் அரிசி ரவை, ஒரு துளி உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
இட்லி தட்டில் நெய் தடவி, மாவை ஊற்றி, 25 - 30 நிமிடம் ஆவியில் வேக வைத்தால், சுவையான பலாப்பழ இட்லி ரெடி. சூடாக நெய் தொட்டு சாப்பிட சுவை அள்ளும்.
விருப்பம் இருந்தால், முந்திரிப்பருப்பு, பாதாமை சிறு, சிறு துண்டுகளாக்கி, நெய்யில் வறுத்து, பலாப்பழ இட்லி மீது, துாவி வேக வைக்கலாம். குழந்தைகள் ஆர்வமுடன் சாப்பிடுவர்.
கர்நாடகாவின் கடலோரம் மற்றும் மலைப்பகுதிகளில், இந்த பலாப்பழ இட்லி, மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.