டேஸ்டியான டிராகன் சிக்கன்
தேவையானப் பொருட்கள்: எலும்பில்லா சிக்கன் - அரை கிலோ, மைதா மாவு, சோயா சாஸ், மிளகு தூள் - தலா 3 டீஸ்பூன், முட்டை - 2, சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது - தலா 2 டீஸ்பூன்.
பெரிய வெங்காயம், சிறிய குடை மிளகாய் - தலா 1, வினிகர், வறுத்த எள் - தலா 1 டீஸ்பூன், தக்காளி சாஸ், சிவப்பு மிளகாய் சாஸ் - தலா கால் கப்.
தாளிக்க... வரமிளகாய் - 4, முந்திரி - 15, நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையானளவு.
சிக்கன் துண்டுகளை இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு, மைதா மாவு, மிளகு துாள், உப்பு, முட்டை, சோயா சாஸ், வினிகரில் கலந்து 30 நிமிடங்கள் ஊற விடவும்.
அடுப்பில் கடாயை வைத்து தேவையானளவு எண்ணெய் ஊற்றி சூடானவுடன், மிதமான தணலில் சிக்கன் துண்டுகளை பொரித்தெடுக்கவும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பூண்டு, வரமிளகாய், முந்திரி சேர்த்து லேசாக வதக்கி, நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்க்கவும்.
பின், நீளமாக நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து கிளறவும். லேசாக வதங்கியதும், தக்காளி, சிவப்பு மிளகாய் சாஸ் சேர்க்கவும். தொடர்ந்து, மிளகு துாள், சர்க்கரை சேர்க்கவும்.
இதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி, ஒரு சில நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
இறுதியாக, கொத்தமல்லி இலை, எள் துாவினால் இனிப்பு, கார சுவையுடன் கூடிய டிராகன் சிக்கன் இப்போது ரெடி.