ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்தது உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்

தமிழக அரசு அறிவித்த, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்து பார்ப்போம்!

அனைத்து தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கும், கடைசியாக பெற்ற மாதச் சம்பளத்தில், ஐம்பது சதவீதம் மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படும்.

இதற்காக, அரசு ஊழியர்கள் தங்கள் மாதச் சம்பளத்தில், பத்து சதவீதத்தை பங்களிக்க வேண்டும். இதற்கான கூடுதல் நிதியை தமிழக அரசு ஏற்கும்.

ஓய்வூதியதாரர் இறந்தால் , அவர் கடைசியாக பெற்ற ஓய்வூதியத்தில், 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும் . ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு, அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்

ஓய்வு பெற்றாலோ அல்லது இறந்தாலோ, இருபத்து ஐந்து லட்சம் ரூபாய் பணிக்கொடை வழங்கப்படும் .

இந்த ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன், ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.

இம்மாதம் ஒன்று முதல், தமிழக அரசு பணியில் சேரும் அனைத்து தகுதியுள்ள ஊழியர்களுக்கும், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் கட்டாயமாகும்

கடந்த ஒன்றாம் தேதிக்கு முன் பணியில் இருந்த அனைத்து அரசு ஊழியர்கள், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அல்லது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை தேர்வு செய்யலாம்.

உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான விரிவான விதிகள், தகுதி நிபந்தனைகள், செயல்பாட்டு வழிகாட்டுதல்கள், செயல்படுத்தல் நடைமுறைகள் தனித்தனியாக அறிவிக்கப்படும்.