இடியா.. மின்னலா... எதுன்னு தெரிஞ்சுக்கலாமா?
பூமியிலிருந்து மேலே செல்லும் நீராவி தான் மேகங்களாக உருவாகின்றன.
இவை ஏற்கனவே இருக்கும் மேகங்களுடன் உராய்வதால், 6000 - 7000 டிகிரி செல்சியஸ் வெப்பம் உருவாகிறது.
இவை ஒரு பகுதியை விரிவடைய செய்கிறது.
அப்படி விரிவடையும் பகுதியிலிருந்து, ஒரு விதமான சத்தமும், வெளிச்சமும் வருகிறது.
இவை தான் இடி, மின்னல் என அழைக்கப்படுகிறது.
இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்பட்டாலும், ஒளியின் வேகம் மணிக்கு 107 கோடி கி.மீ. என்பதால் மின்னல் முதலில் நம் கண்ணுக்குத் தெரியும்.
ஒலியின் வேகம் மணிக்கு 1234 கி.மீ., மட்டுமே. இதனால் தான், இடி தாமதமாக கேட்கிறது.