நீச்சல் பயிற்சிக்கு போறீங்களா... நீங்கதான் தெரிஞ்சுக்கணும் இதை!

உடலின் ஒட்டுமொத்த தசைகளையும் இயங்க வைக்கும் அரிய வகை உடற்பயிற்சிகளுள் ஒன்று நீச்சல் பயிற்சி. ஐந்து வயது குழந்தை முதல் அனைவரும் நீச்சல் பயிற்சி செய்யலாம்.

நீச்சல் குளங்களில் பயிற்சியாளர், லைப் கார்டு கண்காணிப்பில் இருப்பது அவசியம். நீர்நிலைகளில் தனியாக நீந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

நீச்சல் பயிற்சிக்கு முன் உடலை தயார் செய்ய, 5 -10 நிமிடங்கள் லேசான வாம்- அப் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். இது தசை பிடிப்பைத் தடுக்கும்.

நீச்சல் முடிந்ததும் உடனடியாக வெளியே வரக்கூடாது. சிறிது நேரம் உடலை தளர்த்தும் வகையில் மெதுவாக சில நிமிடங்கள் நீந்தி வெளியே வர வேண்டும்.

நீச்சலுக்கு முன்பும், பின்பும் நன்றாக குளித்து விட வேண்டும்.

பயிற்சிக்கு முன், பின் மற்றும் இடையிலும் போதுமான அளவு நீரை குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும்.

சாப்பிட்ட பின் குறைந்தது ஒன்று, இரண்டு மணி நேரம் கழித்தே நீந்த வேண்டும்.

ஒவ்வொருவரின் உடல்நலம், பயிற்சியாளரின் அறிவுறுத்தலுக்கேற்ப எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பயிற்சி பெறலாம். ஆழம் தெரியாத நீர்நிலைகளில் இறங்கவே கூடாது.

நீர்நிலையோ, நீச்சல்குளமோ பிறரின் கண்காணிப்பில்லாமல் நீச்சல் பயிற்சி செய்யக்கூடாது