சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் இன்று !

போதைப்பொருள், சமூகத்தை முற்றிலும் அழிக்கும் ஒரு கொலைகாரனை போன்றது. அனைத்து வகையான நோய்களுக்கும் முன்னோடியாக இருப்பது போதைப்பொருள் பயன்பாடு.

போதைப் பொருட்கள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி 'சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்' கடைபிடிக்கப்படுகிறது.

போதைப்பொருட்களை பயன்படுத்துதல், கடத்துதல், விற்பனை ஆகியவற்றை ஒழிக்க கடுமையான சட்டங்கள் மூலம் அனைத்து நாடுகளும் பல்வேறு முயற்சிகள் எடுக்கின்றன.

ஆனாலும், இதன் பயன்பாடு அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. தினமும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் உலகில் ஆங்காங்கே நடக்கின்றன.

ஹெராயின், அபின், கஞ்சா உள்ளிட்ட பலவகையான போதைப்பொருட்கள் உலகில் சட்டத்துக்கு புறம்பாக விற்பனை செய்யப்படுகிறது.

போதைப்பொருள் பயன்படுத்தும் நபர்கள் மட்டுமின்றி, சார்ந்துள்ள குடும்பமும் சீரழிகிறது. சிலர் அவற்றை பயன்படுத்தாமல் இருக்க முடியாத நிலைக்கு அடிமையாகியுள்ளனர்.

இன்றைய சூழலில் இளைஞர்கள் மட்டுமல்லாமல், பள்ளி மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாவது வருத்தமான விஷயம்.

இம்மாதிரியான மாணவர்களுக்கு சரியான விழிப்புணர்வு வழங்கி அப்பழக்கத்திலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும்.