விடுமுறையை சிறப்பாக்க உதவும் டூர் டிப்ஸ்...
வெளியூர்களுக்கு சுற்றுலா செல்லும்போது, நிறைய சில்லரை காசுகள் கையில் எடுத்துச் செல்லவும்.
காபி, டீ, சில இடங்களில் நுழைவுச்சீட்டு வாங்குதல் போன்றவற்றுக்கு அங்கே போய் சில்லரை தேடிக் கொண்டிருக்க முடியாது.
குளிர் பிரதேசங்களுக்கு செல்கிறீர்கள் என்றால், ஸ்வெட்டர், சாக்ஸ் எடுத்து வைத்துக் கொள்வது அவசியம். வெயில் அதிகமுள்ள இடம் என்றால் குடை, தொப்பி எடுத்து கொள்ளவும்
போகிற இடத்தில் உறவினர்கள் வீடுகளில் தங்குகிறீர்கள் என்றால், உங்கள் வருகையை முன் கூட்டியே அவர்களுக்கு தெரிவித்து விடுங்கள்.
அவர்களின் விடுமுறை நாட்களில் நாம் அங்கு செல்லுமாறு பிளான் போட்டால், அவர்களுடன் கூட்டாகச் சேர்ந்து ஊரைச் சுற்றிப் பார்க்க வசதியாக இருக்கும்.
சீரகம் போட்டு காய்ச்சிய வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் பிடிக்காது. தொண்டைக் கோளாறும் ஏற்படாது. முடிந்த வரை, காய்ச்சிய தண்ணீரை குடியுங்கள்
தலைவலி, வயிற்று வலி, தசைப்பிடிப்பு இவற்றுக்கான மாத்திரைகள், ஆயின்ட்மென்ட்டுகள், பேண்டு எய்ட், காட்டன் இவற்றை கைவசம் வைத்திருங்கள்.
தவிர, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்காக மாத்திரை சாப்பிடுபவர்கள் அவற்றை கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும்