வெற்றி என்பது இறுதியானது அல்ல... வின்ஸ்டன் சர்ச்சிலின் தன்னம்பிக்கை வரிகள் !

நாம் வெற்றி பெற்றால் யாரும் கவனிக்க மாட்டார்கள். தோல்வியடைந்தால் கவனிக்க யாரும் இருக்க மாட்டார்கள்.

நம்பிக்கை இல்லாதவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் கஷ்டத்தைக் காண்கிறான்; நம்பிக்கை உள்ளவன் ஒவ்வொரு கஷ்டத்திலும் உள்ள வாய்ப்பை காண்கிறான்.

உங்களால் எவ்வளவு தூரம் பின்னோக்கிப் பார்க்க முடியுமோ, அவ்வளவு தூரம் முன்னோக்கியும் பார்க்க முடியும்.

வெற்றி என்பது இறுதியானது அல்ல; தோல்வி என்பது அபாயகரமானது அல்ல; தொடர்வதற்கான தைரியம்தான் முக்கியமானது.

முட்டாள்கள் கூட சில சமயங்களில் சரியானவர்கள் என அறிவதே வாழ்க்கையின் மிகச்சிறந்த பாடம்.

நம்மால் முடிந்ததை மட்டும் செய்தால் போதாது. ஒருசில நேரங்களில் தேவையானதை செய்ய வேண்டும்.

நாம் கூறாத வார்த்தைகளுக்கு நாம் எஜமானர்கள், ஆனால் உதிர்த்த வார்த்தைகளுக்கு நாம் அடிமைகள்.

தைரியமே, உங்களை எழுந்து நின்று பேச வைக்கிறது; அதுவே உங்களை உட்கார்ந்து கேட்கவும் வைக்கிறது.

அச்சுறுத்தும் ஆபத்திலிருந்து எப்போதும் பின்வாங்கி ஓட முயற்சிக்கக்கூடாது. அப்போது, அது இரண்டு மடங்காகக்கூடும். தயக்கமின்றி உடனேயே சந்தித்தால், ஆபத்து பாதியாகக்கூடும்.